திருக்கோவை பில்டர்ஸ் & பிரமோட்டர்ஸ்


Vastu Sastra

வாஸ்து சாஸ்திரம் என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். . "வாஸ்து" என்றசொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். "வாஸ்து சாஸ்திரம்" என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும்.

வீட்டை எப்படி அமைக்கலாம்?

  1. தென்கிழக்கு திசையில் சமையல் அறை வைக்க வேண்டும்
  2. கிழக்கு திசையில் படிக்கும் அறை நுழை வாயில் குடிநீர் குழாய் குளியல் அறை வைக்க வேண்டும்
  3. தெற்கு திசையில் சாப்பிடும் அறை படுக்கை அறை வைக்கலாம்
  4. தென்மேற்கு திசையில் புத்தக அறையை வைக்கலாம்
  5. மேற்கு திசையில் நமது பிள்ளைகளின் படுக்கை அறை வைக்கலாம்
  6. வடக்கு திசையில் பண்ம் பீரோ பொருள் சேமிக்கும் அறை வைக்கலாம்
  7. வடமேற்கு .திசையில். க்க்கூஸ் கழிவு நீர் அலுவலக அறை வைக்கலாம்
  8. மேற்கு வடகிழக்குத் திசையில் பூஜை அறைகள் வைக்கலாம்

வாசல்கள்

ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது.

ஒரு சிலர் 3 வாசல் வைத்து வீடு அமைப்பார்கள். இதில் ஒவ்வொரு வாசலும் எந்த திசையில் உள்ளது என்பதை அறிய வேண்டும். முடிந்த வரை கிழக்கு, மேற்கு, வடக்கு திசையில் வாசல்கள் அமைப்பது நலம். தெற்கு பகுதியில் வாசல் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால் வாஸ்து பார்த்து அதனை அடைக்கலாம்.

தென்கிழக்கு, தென்மேற்கில் வாசல் அமைக்கக் கூடாது. ஒரு சில வீடுகளில் தெற்கில் வாசல் அமையும். அதனால் அவ்வளவு பாதிப்பு ஏற்படாது.


கட்டிட வேலை

தரை மட்டத்திற்கு கீழே செய்யப்படும் வேலை என்றால் அதாவது அஸ்திவார வேலை என்றால் அது முதன் முதலில் வடகிழக்கு மூலையிலேயே ஆரம்பிக்க வேண்டும்.

வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வழியாக தென்மேற்கே நிறுத்த வேண்டும்.மீண்டும் வடகிழக்கிலிருந்து வடமேற்கு வழியாக தென்மேற்கு சென்று நிறுத்த வேண்டும்.

இதுவே தரைமட்டத்திற்கு மேல் வேலை வந்துவிட்டது என்றால் தினமும் தென்மேற்கே ஆரம்பித்து வடமேற்கு வழியாக வடகிழக்கிற்கு வரவேண்டும். பிறகு தென்மேற்கே ஆரம்பித்து தென்கிழக்கு வழியாக வடகிழக்கே வரவேண்டும்.

தளம் போடும்போது வீட்டின் தளம் மற்றும் மாடியில் உள்ள தளம் உள்பட அனைத்து தளங்களும் தென்மேற்கே மேடாகவும், வடகிழக்கில் சற்று தாழ்ந்தும் இருக்கவேண்டும்.

மாடியில் தண்ணீர் வெளியேறும் குழாய் மற்றும் தரையில் தண்ணீ ர் செல்லும் வழி உள்பட வடகிழக்கில் மட்டுமே இருக்கவேண்டும்.


கிணறு மற்றும் போர்வெல்

மதிற்சுவர் கட்டுவதற்கு முன்பே கிணறு அல்லது போர்வெல் போட்டுவிட வேண்டும். வடகிழக்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் போர்வெல் போடவேண்டும்.


கதவு, ஜன்னல்

முன் கதவிற்கு நேராக பின் வாசலில் கதவு வைப்பது சிறந்தது. ஆனால் மேற்கு, தெற்கு வாசலிற்கு பின்புறம் கண்டிப்பாக கதவுதான் பொருத்த வேண்டும்.

ஜன்னல்களின் எண்ணிக்கை இரட்டை படையில் வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 10, 20, 30 என்று பூஜ்ஜியத்துடன் வரும் இரட்டைபடை ஆகாது.

வீட்டின் பிரதான கதவிற்கு நேராக பாத்திரம் கழுவும் இடம், கைகழுவும் இடம், குழாய், படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை இவைகளை நோக்கி இருக்கக் கூடாது.


தூண்கள்

வீட்டிற்கு போடப்படும் தூண்கள் வட்டவடிவமே சிறந்தது. சதுரம், செவ்வக வடிவ தூண்கள் போடப்பட்டால் அது சுவரின் உள்ளே மறையும் படி இருக்கவேண்டும். வெளியே தெரிந்தால் அதன் 4 மூலைகளும் விஷ அம்புகள் அது கெடுதலையே செய்யும்.

அந்த மாதிரி கட்டி முடித்த வீட்டில் இருந்தால் கண்ணாடிகளை பொருத்தலாம். அல்லது செயற்கை கொடிகளை வைத்து சுற்றி அலங்கரித்து முனைகளை மறைக்கலாம்.


அடிப்படை வாஸ்து

ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம்.

ஒரு கட்டடம் கட்டும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் அவசியம்.

ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதி பள்ளமாகவும், கனமில்லாமலும், தென்மேற்கு பகுதி உயரமாகவும், கனமாகவும் இருத்தல் அவசியம்.

ஒரு இடத்திற்கு அமைக்கப்படும் தலைவாசல் கட்டாயம் உச்சத்தில் தான் இருக்க வேண்டும்.

உட்புற மற்றும் வெளிப்புற படிக்கட்டுகள் அமைக்கப்படும் நிலையை அறிவது அவசியம்.

ஒரு இடத்தின் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் பற்றி அறிவது அவசியம்.


நீர் தேக்க தொட்டி

ஒரு வீட்டில், கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின் கட்டடத்தின் தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும். ஒரு வீட்டில், கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின்,கட்டடத்தின் வடகிழக்கு, வடமேற்கு,தென்கிழக்கு மூலையில் கண்டிப்பாக வரக் கூடாது. ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் எந்த பகுதியையும், முனையையும் உடைத்து போர்டிகோ அமைக்க கூடாது.


போர்டிகோ

ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தை ஒட்டி அமைக்கப்படும் போர்டிகோ கான்டிலிவர் முறையில் தூண் இல்லாமல் அமைக்க வேண்டும். ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடத்தின் அடித்தளத்தில் கார் நிறுத்துவதற்காக கண்டிப்பாக இடம் அமைக்கக்கூடாது.

ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை அந்த இடத்தின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு மூலையில் அமைக்கலாம். ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை அந்த இடத்தின் வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்கக்கூடாது. ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை அந்த இடத்தில் கட்டப்படும் தாய் சுவரையும், மதில் சுவரையும் தொடாமல் தனியாக அமைக்க வேண்டும்.

ஒரு இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் கொட்டகை - மேல்கூரை சமமாக அல்லது தெற்கு,மேற்கு உயர்த்தியும் வடக்கு,கிழக்கு தாழ்த்தியும் அமைக்க வேண்டும்.


பொருட்கள் வைக்கும் அறை

ஒரு வீட்டிலோ,கட்டடத்திலோ அமைக்கப்படும் பொருட்கள் வைக்கும் அறையை அந்த இடத்தின் தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும். ஒரு வீட்டில்,கட்டடத்தில் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சமையல் அறையில் அதன் தென்மேற்கு மூலையில் பொருட்கள் வைக்கும் அறையை அமைக்க வேண்டும்.

ஒரு வீட்டில்,கட்டடத்தில் வடமேற்கு பகுதியில் உள்ள சமையல் அறையில் அதன் தென்மேற்கு மூலையில் பொருட்கள் வைக்கும் அறையை அமைக்க வேண்டும். ஒரு வீட்டில்,கட்டடத்தில் எந்த ஒரு மூலையிலும் அதன் மேல் தளத்தைத் தாழ்வாக , அமைத்து, அந்த இடத்தை பொருட்கள் வைக்கும் அறையாக அமைக்கக் கூடாது.

ஒரு வீட்டிலோ,கட்டடத்திலோ அமைக்கப்படும் பொருட்கள் வைக்கும் அறையை ,வடகிழக்கு மூலையில் கண்டிப்பாக அமைக்கக் கூடாது. ஒரு வீட்டிலோ,கட்டடத்திலோ உபயோகம் இல்லாத பொருட்களைக் கிடங்கில் பாதுகாப்பதைத் தவிர்ப்பது நல்லது.


கழிவுநீர்த் தொட்டி

ஒரு இடத்தில் அமைக்கும் கழிவுநீர்த் தொட்டியை, அந்த இடத்தின் வடமேற்கு - வடக்குப் பகுதியில் தான் அமைக்க வேண்டும். ஒரு இடத்தில் அமைக்கும் கழிவுநீர் தொட்டியை அந்த இடத்தின் தாய்ச் சுவரையும் மதில் சுவரையும் தொடாமல் அமைக்க வேண்டும். ஒரு இடத்தின் வடமேற்கு - வடக்குப் பகுதியில் அமைக்கும் கழிவுநீர்த் தொட்டியை, வடக்கு மதில் சுவருக்கு வெளியே, மதில் சுவரைத் தொடாமலும் அமைக்கலாம்.

ஒரு இடத்தில் அமைக்கும் கழிவுநீர் தொட்டியை, அந்த இடத்தின் தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் கண்டிப்பாக அமைக்கக் கூடாது. கழிவறையில் இருந்து கழிவு நீர்க் குழாய் மூலம், கழிவுநீர்த் தொட்டிக்கு வரும் கழிவுகளில் அடைப்பு ஏற்பட்டால் பழுது பார்க்க அமைக்கப்படும் சிறிய தொட்டியை தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் அமைக்கக் கூடாது.


மின் இணைப்புப் பெட்டி

மின் இணைப்புப் பெட்டியை ஒரு வீட்டின்,கட்டடத்தின் அக்னி மூலையான தென்கிழக்குப் பகுதியில் அமைக்கலாம். மின் இணைப்புப் பெட்டியை ஒரு வீட்டின்,கட்டடத்தின் வாயு மூலையான வடமேற்குப் பகுதியிலும் அமைக்கலாம்.

ஒரு வீட்டின்,கட்டடத்தின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் மின் இணைப்புப் பெட்டி கட்டாயம் அமைக்கக் கூடாது. இன்வெர்ட்டர் , யூபிஸ் - ஐ ஒரு வீட்டின்,கட்டடத்தின் அக்னி மூலையான தென்கிழக்குப் பகுதியில் அமைக்கலாம். இன்வெர்ட்டர் , யூபிஸ் - ஐ ஒரு வீட்டின்,கட்டடத்தின் வாயு மூலையான வடமேற்குப் பகுதியிலும் அமைக்கலாம். ஒரு வீட்டின்,கட்டடத்தின் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதியில் இன்வெர்ட்டர் , யூபிஸ் கட்டாயம் அமைக்கக் கூடாது.


கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

ஒரு இடத்திற்கு கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை வடகிழக்கு பகுதியில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் அமைத்துக் கொள்ளலாம். கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஒரு கட்டடத்தின் தாய் சுவரையும், மற்றும் அந்த இடத்தின் மதிற்சுவரையும் ஒட்டாமல் அமைக்க வேண்டும். கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் பகுதி தரை தளத்தோடு சமமாக இருக்க வேண்டும். தவிர, ஒரு இடத்தின் வடமேற்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்ககூடாது.


ஆழ்துளை கிணறு அல்லது கிணறு

ஒரு மனை எந்த திசையை பார்த்து இருந்தாலும் அந்த மனையில் கட்டாயம் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு வடகிழக்கு பகுதியில் தான் வரவேண்டும்.

ஒரு இடத்திற்கு பூமி பூஜை செய்த உடன் ஆழ்துளை கிணறு அல்லது கிணறு தோண்டுவது மிகவும் நல்லது. ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதியில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் கட்டிடத்தின் தாய்சுவரையும், மதில்சுவரையும் ஒட்டாமல் அமைக்க வேண்டும்.

ஒரு கட்டிடத்திற்குள் கிணறோ அல்லது ஆழ்துளை கிணறோ கண்டிப்பாக அமைக்ககூடாது. மேலும் ஒரு இடத்தின் வடமேற்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் கட்டாயம் அமைக்ககூடாது.


மதிற்சுவர்

ஒரு கட்டடம் கட்டும் முன் அதன் மதிற்சுவரின் நான்கு மூலைகளையும் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்கும்படி சரியாக அமைத்திடவேண்டும். கட்டப்படும் கட்டிடம் அடையாள குறியிட்ட மதிற்சுவரின் மூலையிலிருந்து 90 டிகிரி மூலைமட்டம் வரும்படி கட்டடம் கட்ட வேண்டும்.

ஒரு இடத்திற்கு நான்கு திசையிலும் கட்டாயம் மதிற்சுவர் அமைக்க வேண்டும். தாய்சுவருக்கும், மதிற்சுவருக்கும் இடையே உள்ள காலியிடம் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிகமாக இருக்க வேண்டும். மேலும் மதிற்சுவருக்கும், கட்டடத்தின் தாய்சுவருக்கும் இடையே அமைக்கப்படும் இடைவெளி சமமாக இருக்க வேண்டும். மதிற்சுவரின் எந்த மூலையும் நீண்டோ அல்லது உடைந்தோ இருக்ககூடாது .


Vastu Date

மனையடி வாஸ்து